EN
Local

உரப் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

சிறு போகத்திற்கான உரங்களை விநியோகிக்கும்போது, விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதற்கு முன்னர் 50 ரூபாவாக இருந்த இந்தக் கட்டணம், தற்போது 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கொழும்பில் இருந்து விவசாய சேவை மையங்களுக்கு உரங்களைக் கொண்டு செல்வதற்காக விவசாயிகளிடம் இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணமே இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு மூடை உரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விவசாய சேவை மையங்களினால் தற்போது 9,550 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button