EN
Local

முல்லைத்தீவு மருத்துவமனையில் லஞ்சம்: 2 அதிகாரிகள் கைது

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தற்காலிக கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் இருவரையும் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை, 18.04.2026 மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கிடைத்த தகவல்களின் படி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நிரந்தர கணக்காளர் இல்லாத நிலை காணப்படுகிறது. கைது செய்யப்பட்ட கணக்காளர் விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றி வருவதுடன், வாரத்திற்கு ஒரு நாள் மருத்துவமனையில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார்.

மருத்துவமனையின் சலவைத் தொழில் ஒப்பந்தத்தை பெற்றிருந்த ஒப்பந்ததாரருக்கு காசோலை வழங்குவதற்காக மாதந்தோறும் பணம் பெற்றுக் கொண்டு காசோலை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, குறித்த ஒப்பந்ததாரர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். அதன்படி, வழக்கம்போல் காசோலை பெறுவதற்காக தனது உறவினர் ஒருவரிடம் பணம் வழங்கி அனுப்பியுள்ளார்.

அந்த பணத்தை தற்காலிக கணக்காளர், முகாமைத்துவ உதவியாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர், குறித்த பணம் அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட உடனேயே, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Related Articles

Back to top button