Local
கபில சந்திரசேன மீள விளக்கமறியலில்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளுக்கமைய கைதான அவர் இன்றைய தினம் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.




