டிட்வா சூறாவளியால் பாதிப்பு – வீடமைப்பு மே மாதத்தில் ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தற்காலிக வீடுகளை அமைக்கும் பணிகள் மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்த சுமார் 1,000 பேருக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான தற்காலிக வீடுகளை குறுகிய காலத்திற்குள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இலங்கை இராணுவத்தின் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள பங்களிப்புடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்த முயற்சி அரசாங்கத்தின் ‘சுநடிரடைனiபெ ளுசi டுயமெய’ எனும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.
திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிப்பதை உறுதி செய்வதற்காக, தெளிவான கால அட்டவணையுடன் கூடிய விரிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு இராணுவத்திற்கு இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.




