Local
முல்லைத்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றுள்ளனர்.
எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.




