EN
Local

காலியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு

காலி, தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (12) காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button