EN
Sports

பஞ்சாப் அணிக்கு தொடரும் தோல்வி – டெல்லி அணி வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 55ஆவது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில் ஷ்ரேயஸ் ஐயர் 59 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 211 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 19 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அக்சர் படேல் 56 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

Related Articles

Back to top button