நேபாளத் தூதுவர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

இலங்கையில் தனது சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்.
இலங்கையின் தனது சேவையை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் கலாநிதி பூர்ணா பகதூர் நேபாளி, ஏப்ரல் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.
கலாநிதி பூர்ணா பகதூர் நேபாளி தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்காக ஆற்றிய சேவையைப் பிரதமர் இதன்போது பாராட்டியதோடு, குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வளர்ப்பதற்கு அவர் வழங்கிய பங்களிப்பிற்காகப் பிரதமரின் நன்றியையும் தெரிவித்தார்.
நேபாளத்துடனான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், இரு நாடுகளினதும் பரஸ்பர முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகப் பிரதமர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்த்ரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.




