EN
Local

தையிட்டி விகாரை காணி விவகாரம்: 28ஆம் தேதி மீண்டும் அளவீட்டு பணிகள்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை நாளை (28.04.2026) காலை 08.00 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர், சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீள வழங்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காணி உறுதி பத்திரங்களை வைத்துள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை அளவீடு செய்து, அதற்கான காணி வரைபடங்களை பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த 17ஆம் தேதி காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. அன்றைய தினம் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் தையிட்டி விகாரை பகுதியில் கூடியிருந்தபோதிலும், பிக்குவினால் அளிக்கப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டைத் தொடர்ந்து அந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் 28ஆம் தேதி காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காணி உரிமையாளர்கள் தங்களது காணி உறுதி பத்திரங்களுடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வருகை தந்து, தங்களது காணிகளை அடையாளம் காட்டுமாறு மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button