Local
தெதுறு ஓயா அனர்த்தம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

குருநாகல் – கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இன்று (17) காலை காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. தற்போது குறித்த இருவரினதும் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடவத்தை பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் கொபெய்கனே பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்தவர்களுடன் இணைந்து 15 பேர் கொண்ட குழுவாக தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.




