EN
Local

நீராடச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்

களுத்துறை, கட்டுகுருந்த கடலில் இன்று (03) நீராடச் சென்ற ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

55 வயதான நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இன்று மாலை 5.30 மணியளவில் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் கடற்கரைக்கு வந்தபொதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காணாமல் போன நபரை தேடும் பணிகளில் அப் பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Back to top button