EN
Local

இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய உச்சம் !

இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில், தனது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான உச்சகட்ட வருமானத்தைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.

அதாவது ஏப்ரல் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான 6 நாட்களில் மட்டும் ஒரு பில்லியன் ரூபாய் (100 கோடி ரூபாய்) வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன அறிவித்துள்ளார்.

5000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வரலாற்றில் மிகக்குறுகிய காலத்தில் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button