EN
Local

கொழும்பில் மர்மான முறையில் பற்றி எரிந்த வீடு – தாய், மகள் பலி – தந்தை உட்பட இருவர் படுகாயம்

கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 55 மற்றும் 16 வயதுடைய ஒரு தாயும் மகளும் என தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் 46 வயதுடைய தந்தையும், வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவரும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட தீயை அண்டை வீட்டார் அணைத்ததுடன், தீக்காயங்களுக்குள்ளான இரண்டு ஆண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டை மேலும் சோதனையிட்டபோது, அறையில் இருந்த இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்குள் பெட்ரோல் வாசனை வீசியதால், யாரோ ஒருவரால் அல்லது தரப்பால் இந்த வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் குற்றத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button