EN
Sports

மும்பையுடனான போட்டியில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 54ஆவது போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் திலக் வர்மா 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தநிலையில் 167 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் க்ருணால் பாண்டியா 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அத்துடன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button