EN
Local

தரம் 5 புலமைப்பரிசில் – இரண்டாம் கட்ட மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் கோர தீர்மானம்

2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2026-ஆம் கல்வியாண்டிற்கான பாடசாலை அனுமதி நடைமுறையில் இரண்டாம் கட்ட மேன்முறையீட்டு விண்ணப்பங்களைக் கோருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, தகுதியுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நாளை ( 08) முதல் இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும். அத்துடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மே 29 ஆம் திகதி வரை முடிவடைகின்றது.

விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்காக www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதள முகவரியின் ஊடாகவும் அல்லது http://g6application.moe.gov.lk என்ற இணையதளம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

Related Articles

Back to top button