EN
International

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவன தலைவர்களில் ஒருவரான அமீர் ஹம்சா மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

லாகூரில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு வெளியே அமீர் ஹம்சாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.

இதில் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமீர் ஹம்சா 1980ஆம் ஆண்டுகளில் ஹபீஸ் சயீதுடன் இணைந்து இந்த அமைப்பை நிறுவினார். இவர் இந்தியாவில் நடந்த தாக்குதல்கள் உள்பட பல பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர் ஆவார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button