Local
மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

மொரவெவ, யாய 6 பகுதியில் சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விவசாய நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்தாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மொரவெவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரே இந்த மின்சாரக் கம்பிகளைப் பொருத்தியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




