EN
Local

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 989 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 989 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 994 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட 33 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள இருவர் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button