EN
Sports

சஞ்சுவின் அதிரடி – டெல்லியை வீழ்த்தியது சென்னை

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 48 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் சார்பில் சமீர் ரிஸ்வி 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 156 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்சன் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

Related Articles

Back to top button