EN
Local

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 241 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின் நேற்றைய (24) அறிக்கையின்படி, குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடு முழுவதும் உள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, பிரிவு மட்டங்களில் அனைத்து பிரதேச பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நேற்றைய தினம் மாத்திரம் 29,818 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 235 நபர்களும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 206 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button