நளின் பண்டாரவின் குற்றச்சாட்டை நிராகரித்த பிரதியமைச்சர்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான கணக்கிலிருந்தோ அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு கணக்கிலிருந்தோ எந்தவொரு நிறுவனத்திற்கும் அல்லது ஒப்பந்தக்காரருக்கும் ஒரே கொடுப்பனவு இரண்டு முறை வழங்கப்படவில்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முறையற்ற கொடுப்பனவு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
அதேபோல், கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் நடைமுறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட அந்த கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கூற்று எனவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.




