EN
Local

தேவையான எரிபொருளை எவ்வித தடையுமின்றி விநியோகிக்கத் தயாராக உள்ளோம்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்வித தடையுமின்றி விநியோகிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் எந்தவித குறையும் ஏற்படாது என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூட்டுத்தாபனம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் நிலவும் நிலைமைகளை கருத்தில் கொண்டு, தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், விநியோகத்தை சீராக மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button