EN
Local

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் மே தினக் கூட்டம், அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியாவில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இவ்வருட மே தின நிகழ்வுகள் “மக்கள் ஆட்சிக்குப் பலம்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த முறை, தேசிய மக்கள் சக்தி கட்சி நாடு முழுவதும் 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களையும் பேரணிகளையும் பிரமாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, நுவரெலியா மாவட்ட மே தினக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்தக் கூட்டத்தில், இராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்ட அமைச்சர்கள், கலைச்செல்வி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான ஆதரவாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button