1,030 கிலோவுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் பறிமுதல்

கற்பிட்டியில் உள்ள தில்லையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் பறிமுதல் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, கற்பிட்டியவில் உள்ள தில்லையடி கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நடத்திய இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான 26 பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும், பைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 1,030 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கையிருப்பை கடற்படை கைப்பற்றியது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் இருப்பு, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.




