Local
பொலிஸாரின் விசேட நடவடிக்கை: 396 பேர் கைது

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய, நேற்று பொலிஸாரால் 25,683 பேர் சோதனையிடப்பட்டதுடன், இதன்போது சந்தேகத்தின் பேரில் 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த நடவடிக்கையின் போது, குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 25 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 191 பேரும், திறந்த பிடியாணை கொண்ட 91 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 பேரும், கவனயீனமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 51 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வேறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 3,332 பேரும் இதன்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.




