EN
Local

ஜனசக்தி – ஜனாதிபதி நிதியம் இணைந்து சிறுவர் சுகாதாரத்திற்கான புதிய தேசிய திட்டம் ஆரம்பம்

கொழும்பு | சமூக நலச் செய்தி

நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சுகாதாரப் பாதுகாப்புத் தேவைகளை உறுதிப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்கால நலனையும் மேம்படுத்தும் நோக்கில், Janashakthi Foundation மற்றும் President’s Fund இணைந்து புதிய தேசிய செயற்றிட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.

நாளை வடிவமைக்க இன்று பாதுகாப்போம்” என்ற மனிதாபிமான தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (06) கொழும்பிலுள்ள Blue Hilton Hotel இல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஜனசக்தி குழுமத்தின் நிறுவுனரும் தலைவருமான C.T.A. Schaffter, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் J.M. Wijebandara, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் G.G.S.C. Roshan உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனசக்தி குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Ramesh Schaffter, பொருளாதார வசதியின்றி தங்கள் பிள்ளைகளின் சிகிச்சைக்காக போராடும் பெற்றோர்களின் துயரத்தை கருத்தில் கொண்டு இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் உயரிய பொதுநல நிதியான ஜனாதிபதி நிதியத்துடன் ஒரு தனியார் பெருநிறுவனம் இவ்வாறு நேரடியாக இணைந்து செயற்படுவது முதல்முறையெனவும், இது வெறும் நிதி உதவியாக அல்லாமல் மனிதாபிமானப் பங்காளித்துவமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் கீழ், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியம் வழங்கும் தொகைக்கு இணையான அளவு அல்லது நிலுவைத் தொகை (இதில் எது குறைவோ அது) ஜனசக்தி அறக்கட்டளையால் மேலதிகமாக வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நோயாளிக்கு கிடைக்கும் மொத்த நிதியுதவி இருமடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அவசர மற்றும் வெளிநாட்டு சிகிச்சைகளுக்கான நிதியுதவி சிகிச்சைக்கு முன்பே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், சிகிச்சைக்குப் பின்னான கொடுப்பனவுகள் பாதுகாவலர்களிடம் வழங்கப்படும்.

மேலும், ஜனாதிபதி நிதியம் கடந்த ஆண்டு முன்னெடுத்த டிஜிட்டல் மாற்றங்களின் மூலம் நாட்டின் 341 பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 100 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து வரும் விண்ணப்பங்கள் 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், 2026 மே 15ஆம் தேதி முதல் ஜனாதிபதி நிதியத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான சிறுவர்களுக்கு மேலதிக நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button