EN
Local

இலஞ்சம் பெற்று தப்பிச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

200,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி பேலியகொடை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது விடுவிப்பதற்காக, இலஞ்சமாக 2 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதுடன் மற்றைய கான்ஸ்டபிள் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இவ்வாறு தப்பிச் சென்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று (04) முற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, மே மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button