EN
Local

வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தவும் – ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

‘டிட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டு இன்னும் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்காக, மே மாத இறுதிக்குள் தற்காலிக வீடுகளைக் கட்டி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க கருத்து வெளியிடுகையில்,

நாட்டில் தற்போது மூன்று மாவட்டங்களை மையப்படுத்தி சுமார் 20 பிரதான தற்காலிக முகாம்கள் செயற்பட்டு வருகின்றன.

அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த சுமார் 500 குடும்பங்கள் தற்போது இந்த முகாம்களில் தங்கியுள்ளனர்.

Related Articles

Back to top button