EN
Local

சாகரிகா ரயில் விபத்துக்கு காரணம் என்ன? விசேட குழு நியமனம்

சாகரிகா ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானமை குறித்து ஆராய்வதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தண்டவாளத்திலுள்ள சிலிப்பர் கட்டைகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததா? என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது. இந்த விபத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை.

அதன்படி, தண்டவாளத்தில் இருந்து ரயில் தொகுதியை அகற்றிய பின்னரே சேத விபரங்களை முழுமையாகக் கூற முடியும்.

சிலிப்பர் கட்டைகளில் ஏற்பட்ட சிக்கலால் தான் இந்த விபத்து நடந்ததா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரே இறுதி முடிவை எட்ட முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button