வட்ஸ்அப்பில் ரீசார்ஜ் செய்யலாம் – அறிமுகமான புதிய வசதி

சமூக வலைத்தளங்களில் மிகவும் தவிர்க்க முடியாத செயலியாக இருப்பது வட்ஸ் அப் தான். 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வட்ஸ்அப்பை 2014 ஆம் ஆண்டு மெட்டா நிறுவனம் வாங்கியது. அதன்பிறகு வட்ஸ்அப்பில் பல்வேறு புதுப்புது அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி, கோப்புகளை அனுப்பும் வசதி என வட்ஸ்அப்பில் தகவல் பரிமாற்றம் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.
வட்ஸ்அப்பில் யுபிஐ வசதியும் உள்ள நிலையில், தற்போது பயனர்களை கவரும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, வட்ஸ்அப் யுபிஐயில் மொபைல் போன் ரீசார்ஜ்களை செய்து கொள்ளும் வசதி அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் இப்போது ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஆகிய நிறுவனங்களின் சிம் அட்டைகளுக்கு வட்ஸ்அப் யுபிஐயிலேயே ரீசார்ஜ் செய்யலாம். பிஎஸ்.என்.எல். பயனர்களுக்கு விரைவில் இந்த வசதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




