EN
International

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சிறைவாசம் அனுபவித்து விடுதலையான ஏ.ஜி. பேரறிவாளன், இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையான பின்னர் பேரறிவாளன் குறித்து பொதுமக்கள் மத்தியில் தகவல்கள் குறைவாகவே வெளியாகி வந்தன. இந்நிலையில், இன்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வழக்கறிஞராக பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

சிறைமீண்ட பின்னர் சட்டப் படிப்பை தொடர்ந்து பயின்று வழக்கறிஞராக தகுதி பெற்றுள்ளார். 31 ஆண்டுகளாக தனது நீதிக்காக காவல்துறை பாதுகாப்புடன் ஏறி இறங்கிய அதே நீதிமன்ற படிகளில், இன்று வழக்கறிஞராக தனது தொழில் பயணத்தை தொடங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Articles

Back to top button