EN
Local

மீண்டும் சேவையில் ஈடுபடும் ‘சாகரிகா’ ரயில்

சமீபத்தில் தடம் புரண்ட ‘சாகரிகா’ ரயில் இன்று (27) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் இன்று (27) முதல் வழமைப் போல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அதன் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.

கடந்த 24 ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிக்கா ரயில் வாத்துவ புகையிரத நிலையத்தில் தடம் புரண்டதுடன், ரயிலின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தடம் புரண்டிருந்தன.

பின்னர், இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்கு அமைய, தடம் புரண்ட சாகரிகா ரயிலில் கடமையாற்றிய நான்கு ஊழியர்கள் ரயில் சேவைக் கடமைகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களை ரயில் சேவைக் கடமைகளில் ஈடுபடுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குறித்த ரயிலின் சாரதி, காப்பாளர் , உதவி சாரதி மற்றும் உதவி காப்பாளர் ஆகியோரை இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button