EN
International

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?

அலி கமேலி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஈரானின் உச்ச தலைவராக பொறுப்பேற்ற மோஜ்தபா கமெனி, படுகாயங்களுடன் தலைமறைவான நிலையில், ஈரானை கடிதம் மூலம் ஆட்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

தனது தந்தைக்குப் பிறகு, ஈரானின் உச்ச தலைவராக பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் தோன்றாத மோஜ்தபா கமேனி, அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படையின் தாக்குதலில் படுகாயமடைந்து, முகம் சிதைந்து பேசக்கூட முடியாத நிலையில் இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது உயர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார். அவரது உடல்நிலை குறித்தும், அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்தும் சர்ச்சைகள் வலுவடைந்து வருகின்றன.

சில ஈரானிய அதிகாரிகள், மொஜ்தபா கமேனி குறைந்தபட்சம் இப்போதைக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை புரட்சிகர காவலர்களின் இராணுவத்தில் உள்ள தளபதிகளுக்கு வழங்கியுள்ளார் என்று கூறியிருப்பதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி சுயநினைவை இழந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் அறிக்கைகள் மூலம் ஈரானி ஆட்சி செய்து வருவதாகக் கூறப்படுவது, உண்மையில் அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் ஊடகங்கள செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Back to top button