EN
International

தமிழக சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு ஆரம்பமாகியது

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று (23) ஒரே கட்டமாகப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாகத் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்தலில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதற்காக மாநிலம் முழுவதும் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் நேரடி ஒளிபரப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ஆம் திகதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே புதிய அரசு அமைப்பதற்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Related Articles

Back to top button