குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமனம்

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவி நியமனத்திற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவியில் முழுநேர பதில் கடமைக்கு இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான இராஜ் சமிந்த பதிராஜவை நியமிப்பதற்காக 2025.05.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரியை நிரந்த நியமனமாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவிக்கு நியமிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




