Local
ஒரே நாளில் 45 மில்லியன்! அதிவேக வீதிகளில் அதிகரித்த வருமானம்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் அதிவேக வீதிகள் வழியாக 163 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Road Development Authority தெரிவிப்பின்படி, ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் மட்டும் 434,338 வாகனங்கள் அதிவேக வீதிகளில் பயணித்துள்ளன.
இதில், ஏப்ரல் 12 அன்று மட்டும் 45 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் பதிவாகியுள்ளது.
மேலும், அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது விபத்து அல்லது வாகன தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால், 1969 என்ற அவசர சேவை எண்ணை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




