EN
Local

நயினாதீவு ராஜமஹா விகாரையில் 88 அடி உயர புத்த சிலை திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் நயினாதீவு ராஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88 அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் சமய சம்பிரதாயங்களுடன் கலந்து கொண்டனர்.

நயினாதீவுக்கு வருகை தந்த பக்தர்கள் முதலில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக விகாரைக்கு சென்று மத நிகழ்வுகளிலும் புத்த சிலை திறப்பு நிகழ்விலும் பங்கேற்றனர்.

Related Articles

Back to top button