EN
International

முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்

தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் பதவியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் இராஜினாமா செய்துள்ளார்.

பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அஸ்தஸ்தை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளன.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில் சட்டசபை உறுப்பினருக்கான வாய்ப்பையும் இழந்தார்.

முன்னதாக, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button