தோனியின் வருகை குறித்து வெளியான தகவல்

இந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி விளையாடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பயிற்சியின்போது அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு உபாதை மீண்டும் தீவிரமடைந்துள்ளமையே இதற்கான காரணம் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
தோனி மைதானத்திற்குத் திரும்புவதற்காக நாங்கள் ஆரம்பத்திலேயே சிறிது முயற்சி எடுத்தோம்.
ஆனால், பயிற்சி ஆட்டத்தின்போது அவருக்கு மீண்டும் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் குணமடைவதற்காக மிகவும் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.
எனினும், இந்த திடீர் பின்னடைவு காரணமாக அவர் போட்டிகளுக்குத் திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும்.
தற்போது நிலவும் சூழலில், தோனி மீண்டும் விளையாடுவது குறித்து வைத்தியக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தத் தகவல் சென்னை சுப்பர் கிங்ஸ் இரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.




