Local
பல்கலைக்கழக அனுமதி குறித்து வெளியான அறிவிப்பு

புதிய கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு நாளை (27) நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் தகைமையைப் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக அனுமதி குறித்த மேலதிக விபரங்களை மாணவர்கள் நாளை நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.




