ஈரான் – கனடா இடையில் கால்பந்து சர்ச்சை!

2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான Canadaவில், இந்த வார இறுதியில் உலக கால்பந்து சம்மேளன மாநாடு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், Islamic Revolutionary Guard Corps (IRGC) உறுப்பினர்களுக்கு கனடாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என கனடா குடிவரவு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஈரானிய கால்பந்து சம்மேளன அதிகாரிகள் கனடாவிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Vancouver நகரில் நடைபெறும் FIFA மாநாட்டில் பங்கேற்க விசா பெற்று சென்றிருந்த ஈரானிய கால்பந்து சம்மேளனத் தலைவர் மற்றும் பிரதி பொதுச்செயலாளர் உள்ளிட்ட மூவர், Toronto Pearson International Airport குடிவரவு அதிகாரிகளின் “தகாத நடத்தை” காரணமாக உடனடியாக நாடு திரும்பியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட கனடா குடிவரவு துறை, ஈரானின் IRGC உறுப்பினர்களுக்கு நாட்டிற்குள் நுழைவு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும், Tasnim News Agency, ஈரானிய இராணுவத்தின் முக்கிய அங்கமாகக் கருதப்படும் IRGC-ஐ கனேடிய அதிகாரிகள் அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
தீவிரவாத குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக, IRGC-இன் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கனடாவுக்குள் நுழைவதை அந்த நாட்டின் அரசு ஏற்கனவேத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஈரானிய கால்பந்து அதிகாரிகளுக்கு விசா வழங்கப்பட்ட விதம் குறித்தும் கனடாவில் விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், விமான நிலையத்தில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




