Local
கொழும்பு திரும்புவோருக்கு விசேட பேருந்து சேவைகள்

புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், கொழும்புக்குத் திரும்புவதற்காக இன்று (17) விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த பேருந்துகள் இன்று (17) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (20) காலை வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மாக்கும்புர பன்முக போக்குவரத்து நிலையத்தின் உதவி முகாமையாளர் டி.எம்.வெத்தசிங்க தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்கள் கிராமங்களிலிருந்து முக்கிய நகரங்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து கால அட்டவணைகளைத் திருத்தி அமைப்பதன் மூலம் போக்குவரத்துச் சேவைகள் முறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




