Local
மட்டக்களப்பு உணவகத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு, 70 ரூபாய் பெறுமதியான 500ml குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (2026.05.08) 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த உணவகத்தில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிகாரசபையினரால் நேற்று (08) நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் போது குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.



