டெல்லியை இலகுவாக வீழ்த்திய பெங்களூரு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை 9 விக்கெட்டுக்களால் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இலகுவாக வீழ்த்தியது.
டெல்லியில் நேற்று (27) நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் அபிஷேக் பொரெல் அதிகபட்சமாக 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் 76 ஓட்டங்கள் எனும் இலகுவான இலக்கை நோக்கி துடுப்பாடிய பெங்களூரு அணி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் பெங்களூரு அணியின் சார்பில் படிக்கல் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




