Local
எரிவாயு விநியோகம் குறித்து வெளியான தகவல்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி, இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயு விநியோகமும் இன்று முதல் வழமை போன்று நடைபெறும் என்று லாஃப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பிரதான முனையங்கள் வழியாக இன்று முதல் 5,000 மெற்றிக் தொன் எரிவாயு விநியோகிக்கப்படும் என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.




