EN
Local

அமைதிக்கான நடைபயணத்தின் நான்காவது நாள்

உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப்படும் அமைதிக்கான நடைபயணத்தின் நான்காவது நாள் சனிக்கிழமை (25) மாவனெல்லை பெலிகம்மன ரஜமஹா விகாரையிலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

இன்று காலை ஆரம்பமான இந்த நடைபயணம் , மாவனெல்லையில் இருந்து கேகாலை ஊடாகத் பயணித்து, தொலங்கமுவ பகுதியில் உள்ள டட்லி சேனாநாயக்க மத்திய கல்லூரியைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அமைதிக்கான நடைபயணம் கடந்த புதன்கிழமை (22) தம்புள்ளை புனித நகரில் கோலாகலமாக ஆரம்பமானது.

வியட்நாமைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பன்னாகர தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவினர் இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த நடைப்பயணத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button