EN
Local

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை அதிபர் சேவையின் தரம் 3இற்கு, ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சை நாளையதினம் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தவிர்க்க முடியாத காரணங்களினால் போட்டிப்பரீட்சை ஒத்திவைக்கப்படுவதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சை நடைபெறும் புதிய திகதி குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button