Local
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 156,456 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, கடந்த 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் 2026 ஏப்ரல் 23ஆம் திகதி வரையில் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 156,456 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 157,423 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் கைது செய்யப்பட்ட 2,663 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 1,993 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




