Local
சித்திரைப் புதுவருடத்தினை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு !

கடந்த நாட்களில் சித்திரைப் புதுவருடத்தினை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகத்தின் பேரில் 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் விசேட அறிவுறுத்தலின்படி, குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், அனைத்து பொலிஸ் பிரிவுகளும் இணைந்து இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. அதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற இந்த நடவடிக்கையின் போது, மொத்தம் 22,195 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 7 பேர் அடையாளம் காணப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




