EN
Sports

டெல்லியை வீழ்த்திய சன்ரைசஸ்!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அஹ்மதாபாத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 243 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

டெல்லி அணியின் சார்பாக நித்திஷ் ராணா 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் ஏஷான் மலிங்க 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button